தேனியில் மதுரை பல்கலையின் தொலை தூரக் கல்வி மையம் அமைப்பு
தேனியில் மதுரை பல்கலையின் தொலை தூரக் கல்வி மையம் அமைப்பு
UPDATED : ஆக 04, 2013 12:00 AM
ADDED : ஆக 04, 2013 10:25 AM
தேனி: தேனியில் மதுரை காமராஜர் பல்கலை தொலைதூரக் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில், மதுரை காமராஜர் பல்கலை சார்பில், ஐந்து தொலைதூர கல்வி மையங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. தேனியில் இரண்டு மையங்களும், பிற பகுதிகளில் மூன்று மையங்களும் செயல்படுகிறது. தேனியில் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் பல்கலை தொலைதூர கல்வி மையத்தின் கிளை செயல்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் பயிற்சி வகுப்புகள், செய்முறை தேர்வுகள், பல்கலை தேர்வுகள் அனைத்தும் தேனியிலேயே நடத்தப்படும். பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட 161 படிப்புகளுக்கும், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சுற்றுலா மற்றும் ஓட்டல் மேலாண்மை உள்ளிட்ட படிப்புகள் சர்வதேச கல்வி தரத்திற்கு இணையாக புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு முகாமிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: 99520 12777, 80123 12777, 04546-262345 எண்களில் தொடர்பு கொள்ளலாம்