UPDATED : ஆக 04, 2013 12:00 AM
ADDED : ஆக 04, 2013 10:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பிளிக்கை: "கல்வியால் மட்டுமே நாடு அமைதியாகவும் வளர்ச்சி பாதையிலும் செல்லும்," என, அன்னை தெரசா மகளிர் பல்கலை துணை வேந்தர் மணிமேகலை, பேசினார்.
அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறிஸ்தவக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை துணை வேந்தர் மணிமேகலை, 82 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
"உலகில் ஒருவனுக்கு எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் அழிந்து விடும். ஆனால் என்றும் அழியாத மற்றும் நிலையான செல்வம் கல்வி. மாணவர்கள் எப்போதும் தங்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தங்களுடைய கல்வி மேம்படும். கல்வியால் மட்டுமே நாடு அமைதியாகவும், வளர்ச்சி பாதையிலும் செல்லும்," என்றார்.