மருத்துவ படிப்பு: 1,070 இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்
மருத்துவ படிப்பு: 1,070 இடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு துவக்கம்
UPDATED : ஆக 05, 2013 12:00 AM
ADDED : ஆக 05, 2013 08:36 AM
தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் உள்ள, 1,823 மருத்துவ இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு, கடந்த மாதம், 18ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடந்தது.முதல் கட்ட கலந்தாய்வு முடிவில், ஏழு பேர் மருத்துவப் படிப்பை நிராகரித்தனர்.
இந்நிலையில், மருத்துவப் படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்கி, 16ம் தேதி வரை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடக்கிறது. அரசு கல்லூரியில் உள்ள, 356 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, 714 இடங்கள் என, அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 1,070 இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டாலின், சேலம் ஆகிய கல்லூரிகளில் உள்ள கூடுதல் இடங்களும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் விவரம் வருமாறு...
சென்னை மருத்துவக் கல்லூரி 73
ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி 86
மதுரை மருத்துவக் கல்லூரி 01
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி 01
மோகன் குமரமங்களம் கல்லூரி, சேலம் 21
கே.ஏ.பி., விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி, திருச்சி 44
அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி 42
அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி 01
அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி 02
அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி 85
மொத்தம் உள்ள இடங்கள் 356
தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள காலி இடங்கள்:
பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரி, கோவை 97
ஐ.ஆர்.டி., மருத்துவக் கல்லூரி, பெருந்துறை 39
ஸ்ரீ முகாம்பிகை மருத்துவக் கல்லூரி, குலசேகரம் 50
கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, சின்னகொளப்பாக்கம் 65
ஸ்ரீ முத்துகுமரன் மருத்துவக் கல்லூரி,சென்னை 75
கற்பகம் மருத்துவக் கல்லூரி, கோவை 76
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, பெரம்பலூர் 75
அன்னபூரணா மருத்துவக் கல்லூரி, சேலம் 75
இ.எஸ்.ஐ.சி., மருத்துவக் கல்லூரி, கே.கே.நகர், சென்னை 65
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, மதுரை 97
மொத்தம் உள்ள இடங்கள் 714