பள்ளி மாணவர்களுக்கு "யோகா" கல்வி கட்டாயம்: ம.பி. அரசு
பள்ளி மாணவர்களுக்கு "யோகா" கல்வி கட்டாயம்: ம.பி. அரசு
UPDATED : ஆக 05, 2013 12:00 AM
ADDED : ஆக 05, 2013 11:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, யோகா கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு யோகா கல்வி வழங்கப்படுவதன் மூலம் அவர்களின் மனம் ஒருமுகப்படுத்தப்படும். இதன் மூலம் குழந்தைகளின் சிந்தனை திறன் அதிகரிக்கும். இதனால் மாணவர்களின் படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.
மேலும் சிறுவயதிலேயே யோகா கற்பதன் மூலம், அந்தப் பழக்கத்தை கடைசி வரை கொண்டு வரலாம். யோகா மாஸ்டர், ஆசிரியர்களுக்கு யோகா பயற்சியை கற்றுக்கொடுப்பர்; இதன்பின், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு "யோகா" பயிற்சி அளிப்பார்கள் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது வரவேற்கதக்கத் திட்டம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.