UPDATED : ஆக 07, 2013 12:00 AM
ADDED : ஆக 07, 2013 08:20 AM
மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர், அதே பாடத்திற்கு, மறுகூட்டலுக்கு, விண்ணப்பிக்கத் தேவையில்லை. விடைத்தாள் நகல் பெற்றபின், மறு மதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, வாய்ப்பு அளிக்கப்படும்.
மறுகூட்டல் மட்டும் செய்ய விரும்பும் மாணவர், விடைத்தாள் நகல் கேட்டு, விண்ணப்பிக்க வேண்டாம். www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக, 7,8 தேதிகளில் (இன்றும், நாளையும்), விண்ணப்பிக்கலாம். பதிவிறக்கம் செய்யும் வங்கி செலான் மூலம், 10ம் தேதிக்குள், உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் பெற, ஆங்கிலம், தமிழ் பாடங்களுக்கு, 550 ரூபாயும், இதர பாடங்களுக்கு தலா, 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலாக இருந்தால், மொழிப் பாடங்கள் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கு, தலா, 305 ரூபாயும், இதர பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும், கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

