தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேராசிரியர்கள் பற்றாக்குறை: மாணவிகளின் எம்.பில்., படிப்பு கனவு தகர்ந்தது

பேராசிரியர்கள் பற்றாக்குறை: மாணவிகளின் எம்.பில்., படிப்பு கனவு தகர்ந்தது

பேராசிரியர்கள் பற்றாக்குறை: மாணவிகளின் எம்.பில்., படிப்பு கனவு தகர்ந்தது


UPDATED : ஆக 07, 2013 12:00 AM

ADDED : ஆக 07, 2013 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2013 12:00 AM ADDED : ஆக 07, 2013 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் போதிய பி.எச்.டி.,பேராசிரியர் இன்றி, எம்.பில்., சேர முடியாமல் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்கல்லூரி வணிகவியல் துறையில், கடந்த ஆண்டு எம்.பில்., ஆய்வு படிப்பு கொண்டு வரப்பட்டது. முதுகலை வணிகவியல் பட்டம் பெற்ற மாணவிகள் எம்.பில்.,லில் சேரலாம். பி.எச்.டி., முடித்த பேராசிரியர்கள் தான் இவர்களுக்கு வழிகாட்டியாக நியமிக்க முடியும்.

கடந்தாண்டு 3 பேராசிரியர்கள் மட்டும் இருந்ததால் தலா ஒருவருக்கு 2 பேர் வீதம் 6 மாணவிகளை எம்.பில்., வகுப்பில் சேர்த்தனர். 2013-14ம் கல்வியாண்டில் 18 பேர் எம்.பில்.,வகுப்பில் சேர விண்ணப்பித்தனர். தற்போது 2 பேராசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதால், 4 மாணவிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போதிய பேராசிரியர்கள் இன்றி மற்ற மாணவிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கூடுதல் மாணவிகளை சேர்க்க, கல்லூரி நிர்வாகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கு பரிந்துரை செய்தும் அனுமதி கிடைக்கவில்லை. இக்கல்லூரி வணிகவியல் துறையில் எம்.பில்., படிப்போரின் எண்ணிக்கை 2 வது ஆண்டாக குறைந்தது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகையில், "பின் தங்கிய மாவட்டத்தில் உயர் படிப்பிற்கு அனுமதி கிடைப்பதே அரிது. அதிலும், போதிய பேராசிரியர்கள் இன்றி, எம்.பில்., போன்ற ஆய்வு படிப்புகளை படிக்க முடியாத நிலை தொடர்கிறது. இக்கல்லூரியில் பணியில் 2 பேராசிரியர்களும் கூடுதல் மாணவிகளுக்கு வழிகாட்ட அழகப்பா பல்கலை அனுமதித்தால் மேலும் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும்," என்றனர்.

கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, "இத்துறையில் ஒருவர் மாற்று பணியில் சென்றதால் 2 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதால் 4 மாணவிகளை சேர்க்க முடிந்தது. மற்ற அரசு கல்லூரிகளில் பி.எச்.டி.,முடித்த ஒரு பேராசிரியர் 5 எம்.பில்.,மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றனர். சிவகங்கையில் இந்நிலை நீடித்தால் எம்.பில்.,ஆய்வு படிப்பு கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவேறாது," என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us