தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்டக் கல்லூரிகளை திறக்க ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

சட்டக் கல்லூரிகளை திறக்க ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

சட்டக் கல்லூரிகளை திறக்க ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்


UPDATED : நவ 27, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
‘சட்டக் கல்லூரிகளை உடனடியாக திறந்து, தேர்வுகளை நடத்த வேண்டும்’ என சென்னை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இடை யே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக, கல்லூரி, விடுதி குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அட்வகேட் ஜெனரல் மாசிலாமணிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ முன், அறிக்கையை அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி தாக்கல் செய்தார். அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
கல்லூரிக்குள் நோட்டீஸ், பேனர், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்களை வினியோகிக்கவோ, ஒட்டவோ கூடாது. வளாகத்துக்குள் அரசியல், மதம், ஜாதி இயக்க நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது. விடுதியில் உள்ள மாணவர் களுக்காக தனியாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
கல்லூரிக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு புகைப்படத் துடன் கூடிய அடையாள அட்டை யை வழங்க வேண்டும். மாணவர்கள் சிலரின் நடவடிக்கையால் கல்லூரிகள் மூடப்பட்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட் டுள்ளன. இதனால் 7,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அனைத்துக் கல் லூரிகளையும் திறந்து அட்டவணைப்படி தேர்வுகளை நடத்த வேண்டும். இல்லையென்றால், அடுத்த செமஸ்டரில் பாதிப்பு ஏற்படும்.
மாணவர்களிடம் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு குழுவை ஐகோர்ட் நியமிக்கலாம். கல்லூரிக்குள் உள்ள கேன்டீனில் சிகரெட், குட்கா, விற்கப்படுகிறது; இதை மூட வேண்டும். ஆசிரியர்கள் காலியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மனுக்கள் மீதான விசாரணை நவ. 27ம் தேதி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us