தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓவிய கல்லூரி ஆய்வின் போது மாணவர்களுக்கு "மாடலாக" நின்ற அமைச்சர்

ஓவிய கல்லூரி ஆய்வின் போது மாணவர்களுக்கு "மாடலாக" நின்ற அமைச்சர்

ஓவிய கல்லூரி ஆய்வின் போது மாணவர்களுக்கு "மாடலாக" நின்ற அமைச்சர்


UPDATED : ஆக 08, 2013 12:00 AM

ADDED : ஆக 08, 2013 07:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2013 12:00 AM ADDED : ஆக 08, 2013 07:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை கவின் கலை கல்லூரி, கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ், செயல்பட்டு வருகிறது. இதில், ஓவியம், காட்சி தொடர்பியல், சிற்பக்கலை, அச்சு பொருள் தயாரிப்பு, செராமிக் கலை போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறது. இக்கல்லூரியில், 1,000த்திற்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இருப்பினும், போதுமான கழிப்பறை வசதியின்மை, குடிநீர் தட்டுப்பாடு, வகுப்பறையில் அசுத்தம் போன்ற பிரச்னைகள் நீடித்து வந்தன.

கடந்த வாரம், மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது, கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் குணசேகரன், மாணவர்களோடு கல்லூரி வளாகத்தை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உடனே செய்து தருவதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், நேற்று, முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான நேர்காணலை துவங்கி வைக்க வந்த, பள்ளிக்கல்வி மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் வைகை செல்வன், கல்லூரி வளாகத்தை ஆய்வு செய்தார். அப்போது, ஓவியத் துறை மாணவர்கள், அமைச்சரை ஓவியமாக வரைய அனுமதி கோரினர்.

அதற்கு சம்மதித்த அமைச்சர் வைகை செல்வன், 15 நிமிடம், மாடலாக நின்றார். மூன்று மாணவர்கள் தத்ரூபமாக அமைச்சரை படமாக வரைந்து, அவரிடமே கொடுத்தனர். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட அமைச்சர், முதலாமாண்டு மாணவர்களுக்கு சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us