தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெடுஞ்சாலையில் இறைவணக்க கூட்டம்; சிறுவாக்கம் மாணவர்கள் தவிப்பு

நெடுஞ்சாலையில் இறைவணக்க கூட்டம்; சிறுவாக்கம் மாணவர்கள் தவிப்பு

நெடுஞ்சாலையில் இறைவணக்க கூட்டம்; சிறுவாக்கம் மாணவர்கள் தவிப்பு


UPDATED : ஆக 08, 2013 12:00 AM

ADDED : ஆக 08, 2013 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2013 12:00 AM ADDED : ஆக 08, 2013 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: சிறுவாக்கம் நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் விளையாட்டுத் திடல் ஏற்படுத்தி தர வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம் ஊராட்சியில், நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த, 189 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட, 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஓட்டு கட்டடம் உட்பட மூன்று கட்டடங்களில், வகுப்பறை அமைந்துள்ளது.

பள்ளிக்கு, விளையாட்டு திடல் மற்றும் சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்கள் விளையாட்டு வகுப்பின் போது, அங்குள்ள தனியார் நிலத்தில் விளையாடி வருகின்றனர். மேலும், இறைவணக்க கூட்டம், சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாவின் போது, மாணவர்கள் அருகில் உள்ள நெடுஞ்சாலையில் ஆபத்தான வகையில் நிற்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், "கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன், குறுகிய இடத்தில் பள்ளி துவங்கப்பட்டது. தற்போது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இடவசதி இல்லை. இவர்கள், சில நேரங்களில் ஆபத்தான நிலையில், நெடுஞ்சாலைக்கு வரவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், பள்ளிக்கு விளையாட்டுத் திடல் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us