தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழங்குடி மக்களின் கலை நிகழ்ச்சி: ரசித்த சென்னை மாணவர்கள்

பழங்குடி மக்களின் கலை நிகழ்ச்சி: ரசித்த சென்னை மாணவர்கள்

பழங்குடி மக்களின் கலை நிகழ்ச்சி: ரசித்த சென்னை மாணவர்கள்


UPDATED : ஆக 09, 2013 12:00 AM

ADDED : ஆக 09, 2013 09:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2013 12:00 AM ADDED : ஆக 09, 2013 09:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில், தோடர் மற்றும் மலையாளி பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அருங்காட்சியகங்கள் துறை மற்றும் கலை பண்பாட்டுத் துறை இணைந்து வழங்கிய, பண்பாட்டு பலகணி நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் அருங்காட்சியக கலையரங்கில், நேற்று நடந்தது. கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர், குணசேகரன் வரவேற்றார்.

விழாவில், நீலகிரி தோடர் இன மக்களின் கலை நிகழ்ச்சியை, அம்சவள்ளி கலைக் குழுவினர் வழங்கினர். அதே போல், சேலம் பாலமேடு மலையாளிகள் கிராம குழுவின், சேர்வையாட்டம் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை நகர வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட மாணவர்களுக்கு, பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகள், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள், ஆர்வத்துடன் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு, பதக்கம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us