தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கான உத்தேச தேதி விபரங்கள்

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கான உத்தேச தேதி விபரங்கள்

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கான உத்தேச தேதி விபரங்கள்


UPDATED : ஆக 09, 2013 12:00 AM

ADDED : ஆக 09, 2013 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2013 12:00 AM ADDED : ஆக 09, 2013 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 19ம் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வின் முதல் நிகழ்வாக, அன்றைய நாள் காலையில், முன்னாள் ராணுவ வீரர் பிள்ளைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன்பிறகு, கட்-ஆப் மதிப்பெண் 197.25 -இலிருந்து கலந்தாய்வு தொடங்கும்.

B.Sc., Nursing, B.Pharm, B.A.S.L.P, BPT, BOT, B.Sc., Radiology & Imaging Technology, B.Sc., Radio Therapy Technology ஆகிய படிப்புகள் துணை மருத்துவப் படிப்புகள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருகின்றன.

ஆகஸ்ட் 19ம் தேதி துவங்கும் கலந்தாய்வு, அதே மாதம் 24ம் தேதி வரை நடைபெறும். பிறகு மீண்டும் 29ம் தேதி தொடங்கி, 31ம் தேதி வரை நடைபெறும்.

இதன்பிறகு, செப்டம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் இறுதி கட்டமாக நடைபெறும். கடைசி கட்-ஆப் மதிப்பெண் 135.50.

கலந்தாய்வு நடக்கும் இடம் - ஆடிட்டோரியம், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகம், சென்னை - 10.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us