கால்நடை முதுகலை பட்டப்படிப்பு: விண்ணப்பிக்க 12ம் தேதி கடைசி
கால்நடை முதுகலை பட்டப்படிப்பு: விண்ணப்பிக்க 12ம் தேதி கடைசி
UPDATED : ஆக 10, 2013 12:00 AM
ADDED : ஆக 10, 2013 08:55 AM
அ நிறம் | அளவு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும், எம்.வி. எஸ்சி., - எம்.டெக்., உணவு தொழில்நுட்பம், எம்.எஸ்சி., (உயிர் புள்ளியியல், உயிர் தொழில்நுட்பம்) உள்ளிட்ட முதுகலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இப்படிப்பிற்கான விண்ணப்பங்களை, www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு கட்டணத்துடன், "தலைவர், தேர்வு குழு (முதுகலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை - 51" என்ற முகவரிக்கு, 12ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் தகவல்களை, www.tanuvas.ac.inஎன்ற பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பெறலாம்.
