UPDATED : ஆக 10, 2013 12:00 AM
ADDED : ஆக 10, 2013 08:57 AM
அ நிறம் | அளவு
சென்னை: கல்லூரி பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு முடிவில், 272 பேர் இடமாறுதல் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகளில், 5,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், பொது கலந்தாய்வு முறையில், இடமாறுதல் நடக்கிறது. நடப்பாண்டிற்கான கல்லூரி பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, 5ம் தேதி துவங்கி, 8ம் தேதி முடிவடைந்தது.
முதல் நாள் கலந்தாய்வு முடிவில், 94 பேர்; இரண்டாம் நாளில், 47 பேர்; மூன்றாம் நாளில், 69 பேர்; நான்காம் நாளில், 62 பேர் இடமாறுதல்களை பெற்றனர். நான்கு நாட்கள் கலந்தாய்வில் பங்கேற்ற, 470 பேரில், 272 பேர் இடமாறுதல் பெற்றனர்.
