தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனுமதி பெறாத சிறுவர் இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஆபத்து

அனுமதி பெறாத சிறுவர் இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஆபத்து

அனுமதி பெறாத சிறுவர் இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஆபத்து


UPDATED : ஆக 10, 2013 12:00 AM

ADDED : ஆக 10, 2013 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2013 12:00 AM ADDED : ஆக 10, 2013 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனியில் புற்றீசல் போல் பெருகி வரும், அனுமதி பெறாத சிறுவர் இல்லங்களால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இருந்து, கேரளா இடுக்கி மாவட்டத்தில் உள்ள எஸ்டேட்களில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். எஸ்டேட்களில் கூலி வேலை செய்வோர், தங்கள் குழந்தைகளாவது நன்றாக படிக்க வேண்டும், என்ற நோக்கில் தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர்.

 தனியார் விடுதிகளில் சேர்த்து படிக்க வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு வசதியில்லாததால், அரசு விடுதிகளிலும் இடம் கிடைக்காத நிலையில் ஆதரவற்றோர்களுக்காக செயல்படும் சிறுவர் இல்லங்களில் தங்க வைத்து செல்கின்றனர். மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்தோர், ஆதரவற்றோரும் சிறுவர் இல்லங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

சிறுவர் இல்லம் துவங்குவதற்கு, சிறுவர்கள் நீதி சட்டம் 2006 ன் படி, சமூக நல துறையில் அனுமதி பெற வேண்டும். மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற சிறுவர் இல்லங்கள் 29 உள்ளன. அனுமதி பெறாதவை 50 க்கும் மேல் உள்ளன. அனுமதி பெறாத சிறுவர் இல்லங்களில், பலர் தங்கள் குழந்தைகளை சேர்த்து விடுகின்றனர்.

இந்த இல்லங்களில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இருப்பதில்லை. இல்ல நிர்வாகிகளின் வீட்டு வேலைகள் உள்ளிட்ட பணிகளை செய்ய கட்டயாப்படுத்துகின்றனர். இதில் மாணவர்களும், மாணவியரும் உடல்,மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமூக நல அலுவலர்கள், குழந்தகைள் நல பாதுகாப்பு குழுவினர் தொடர் கண்காணிப்பு, ஆய்வுகள் நடத்துவதில்லை. இதனால் பல விரும்பதகாத செயல்கள் அரங்கேறுகிறது. இதில் மனமுடைந்த மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். மாவட்ட நிர்வாகம், தாமதப்படுத்தாமல் அனுமதி பெறாத சிறுவர் இல்லங்களில் ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து, ஆதரவற்ற மாணவர்களின் வாழ்வு மேம்பட வகை செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us