காலி பணியிடங்களை நிரப்ப மருந்தாளுனர் சங்கம் வலியுறுத்தல்
காலி பணியிடங்களை நிரப்ப மருந்தாளுனர் சங்கம் வலியுறுத்தல்
UPDATED : ஆக 12, 2013 12:00 AM
ADDED : ஆக 12, 2013 07:49 AM
அ நிறம் | அளவு
இதுகுறித்து, ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: காலியாக உள்ள, 550 மருந்தாளுநர் பணியிடங்களை விரைந்து நிரப்ப, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் நோயாளர் காப்பீடு திட்டத்தில், மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை, மருந்தாளுனர்களுக்கும் வழங்க வேண்டும்.
முப்பது ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் மருந்தாளுனர்களுக்கு பதவி உயர்வளிக்க வேண்டும். அரசு அறிவித்த மருந்து கிடங்கு அலுவலர்களின் தர ஊதியம், திருப்தி அளிக்காத நிலையில், மீண்டும் பரிசீலனை செய்து, ஊதிய விகிதத்தை மாற்றித்தர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
