தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைகளுக்கு போலீசார் நடத்திய ஓவியப் போட்டி

குழந்தைகளுக்கு போலீசார் நடத்திய ஓவியப் போட்டி

குழந்தைகளுக்கு போலீசார் நடத்திய ஓவியப் போட்டி


UPDATED : நவ 28, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
அரசு, மாநகராட்சிப் பள்ளி மாணவ மாணவியருக்கு ‘மழலையர் பார்வையில் காவல் துறை’ எனும் தலைப்பிலான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
மாநகர போலீஸ் மேற்கு மற்றும் மத்திய சட்டம், ஒழுங்கு பிரிவு சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் 31 மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 200 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இப்போட்டி குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
போலீஸ் என்றாலே மாணவ மாணவியர் மத்தியில் ஒருவித பய உணர்வு உள்ளது. தேவையற்ற இந்த பயத்தை போக்கி, காவல் துறையின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களின் ஒத்துழைப்பை பெறவே இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதனால் இப்போட்டிக்கு ‘மழலையர் பார்வையில் காவல் துறை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் வரைந்த ஓவியங்களை வைத்து அவர்களின் மன ஓட்டத்தை அறிய முடியும். இதே போல் ஆறு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசு உண்டு,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us