தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் ஐ.டி., கல்விக்கு ரூ.86 கோடி

அரசு பள்ளிகளில் ஐ.டி., கல்விக்கு ரூ.86 கோடி

அரசு பள்ளிகளில் ஐ.டி., கல்விக்கு ரூ.86 கோடி


UPDATED : ஆக 13, 2013 12:00 AM

ADDED : ஆக 13, 2013 08:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2013 12:00 AM ADDED : ஆக 13, 2013 08:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழகம் முழுவதும் 4340 அரசு பள்ளிகளில் "தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பிக்கும் திட்டம்" செயல்படுத்தும் பணிகள் துரிதபடுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்காக, தமிழகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் 4,574 உயர்நிலைப் பள்ளி, 5,030 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டில் இதில் 4,340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் "தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம்" அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மாணவர்களின் மொழித்திறன், கல்வித்தரத்தை மேம்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப கல்வி அளிக்க, ஒரு பள்ளிக்கு உத்தேச நிதியாக (மாணவர்களின் எண்ணிக்கை சார்ந்து) ரூபாய் 19 லட்சம் வீதம், மொத்தம் 86 கோடி ரூபாய் நிதியை, தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து தளவாட பொருட்களும் வாங்கப்படவுள்ளது. ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us