தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகம் முழுவதும் 106 பகுதி நேர நூலகங்கள் திறப்பு

தமிழகம் முழுவதும் 106 பகுதி நேர நூலகங்கள் திறப்பு

தமிழகம் முழுவதும் 106 பகுதி நேர நூலகங்கள் திறப்பு


UPDATED : ஆக 13, 2013 12:00 AM

ADDED : ஆக 13, 2013 08:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2013 12:00 AM ADDED : ஆக 13, 2013 08:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாநிலம் முழுவதும், 106 பகுதி நேர நூலகங்களை திறப்பதற்கான உத்தரவுகளை, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன், நேற்று வழங்கினார்.

பொது நூலகத்துறை சார்பில், நூலகர் தின விழா, சென்னையில், நேற்று மாலை நடந்தது. பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, தலைமை தாங்கினார். நூலகத் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் வரவேற்றார்.

பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன், 106 பகுதி நேர நூலகங்களை திறப்பதற்கான உத்தரவுகளை வழங்கி பேசியதாவது: சீர்காழியைச் சேர்ந்த அரங்கநாதன், நூலகத் துறையின் முன்னோடியாக, நாடு முழுவதும் புகழப்படுகிறார். அவரது பிறந்த நாளான ஆக., 12ம் தேதி, நூலகர் தினமாக கொண்டாடப்படுகிறது.

சிறப்பாக பணியாற்றும் நூலகர்களுக்கு, அவரது பிறந்த நாளில் நடக்கும் விழாவில், "நல் நூலகர்" விருது வழங்கப்பட்டு வந்தது. முதல்வர் உத்தரவுப்படி, கடந்த இரு ஆண்டுகளாக, இந்த விருதின் பெயர், "எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது" என மாற்றி வழங்கப்பட்டு வருகிறது.  வாசிக்கும் பழக்கத்தை, அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், தேவநேயப் பாவாணர் நூலகத்திற்கு, அதிகாரிகளுடன் சென்று, வாசகர்களோடு, வாசகராக அமர்ந்து, அமைச்சர் புத்தகங்களை படித்தார்.

முன்னதாக, விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அமைச்சர், பரிசுகளை வழங்கினார்.

பகுதி நேர நூலகம் குறித்து, இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறுகையில், "புதிய பகுதி நேர நூலகங்களில், தலா, ஒரு பகுதிநேர நூலகர், பணி நியமனம் செய்யப்படுவார். அந்தந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பகுதி நேர நூலகரை, பணி நியமனம் செய்வர். ஒரு நாளைக்கு, மூன்று மணி நேரம் மட்டும், பகுதிநேர நூலகம் செயல்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us