UPDATED : ஆக 15, 2013 12:00 AM
ADDED : ஆக 15, 2013 09:10 AM
அ நிறம் | அளவு
சென்னை: எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட முதுகலைப் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு, வரும், 21 முதல், 29ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு, 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், தாமாக முன்வந்து, சரண்டர் செய்யும் இடங்கள் ஆகியவற்றை, கலந்தாய்வு மூலம் நிரப்ப, அண்ணா பல்கலை ஏற்பாடு செய்துள்ளது.
மொத்தம், 17 ஆயிரம் இடங்களை நிரப்ப, வரும், 21ம் தேதி முதல், 29ம் தேதி வரை, பல்கலை வளாகத்தில் கலந்தாய்வு நடக்கிறது.
