தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான பணி: கவர்னர் ரோசய்யா பெருமிதம்

கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான பணி: கவர்னர் ரோசய்யா பெருமிதம்

கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான பணி: கவர்னர் ரோசய்யா பெருமிதம்


UPDATED : ஆக 17, 2013 12:00 AM

ADDED : ஆக 17, 2013 09:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2013 12:00 AM ADDED : ஆக 17, 2013 09:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: "கல்வித்துறையில் சிறந்த முறையில், தமிழக அரசு பணியாற்றி வருகிறது," என, கவர்னர் ரோசய்யா பேசினார்.

கோவை, பெரியநாயக்கன்பாளையம் ரங்கசாமிநாயுடு மேல்நிலைப்பள்ளியில் பொன்விழா ஆண்டு மலரை கவர்னர் ரோசய்யா வெளியிட, "தினமலர்" நாளிதழ் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், கவர்னர் ரோசய்யா பேசியதாவது:

"பள்ளிக்கூடங்களை கட்டுவது என்பது ஆயிரம் கோவில்கள் மற்றும் ஆயிரம் அன்ன சத்திரங்களை கட்டுவதற்கு சமம்" என, தேசியகவி பாரதியார் பாடியுள்ளார். எந்த ஒரு கல்வி நிறுவனமும் நமது கலாச்சாரம், பண்பாடு, மனிதநேயம், ஆன்மிகத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, தமிழக அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இச்செயல் எதிர்காலத்தில், தமிழக கல்வித்துறையை உயர்ந்த இடத்துக்கு அழைத்து செல்லும். கடந்த 2011ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஆண்களில் கல்வி அறிவு பெற்றவர்கள் 82.14 சதவீதம், பெண்களில் 65.46 சதவீதமாக இருந்தது.

தமிழகத்தில் ஆண்களில் 86.8 சதவீதமும், பெண்களில் 73.9 சதவீதமும் கல்வி அறிவு பெற்றவர்கள், என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை மேலும் அதிகரிக்க, பள்ளியில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட நிர்வாகத்தோடு கல்வித்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், விளையாட்டு உள்ளிட்ட இதர துறைகளிலும் ஆர்வத்தோடு ஈடுபடச் செய்ய வேண்டும். இவ்வாறு, கவர்னர் ரோசய்யா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us