தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக் கட்டண விவகாரம்: மாணவர் அமைப்பினர் சட்டசபையை முற்றுகையிட்டனர்

கல்விக் கட்டண விவகாரம்: மாணவர் அமைப்பினர் சட்டசபையை முற்றுகையிட்டனர்

கல்விக் கட்டண விவகாரம்: மாணவர் அமைப்பினர் சட்டசபையை முற்றுகையிட்டனர்


UPDATED : ஆக 17, 2013 12:00 AM

ADDED : ஆக 17, 2013 10:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2013 12:00 AM ADDED : ஆக 17, 2013 10:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபையை முற்றுகையிட வந்த மாணவர் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், கோட்டை நுழைவு வாயிலில், பரபரப்பு ஏற்பட்டது.

"தமிழகத்தில் படிக்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியரின், அனைத்து மேற்படிப்புக்கும், அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை, மாணவர்கள் செலுத்த வேண்டியதில்லை; அந்த கட்டணத்தை, அரசே, அந்தந்த சுயநிதி கல்லூரிகளுக்கு செலுத்தும்" என, கடந்த ஆண்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அரசாணையின்படி கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால், மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசாணையை செயல்படுத்தக் கோரி, சட்டசபை முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக, அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம், ஆகியவை அறிவித்தன.

அதன்படி, நேற்று காலை, 10:45 மணிக்கு, அவ்வமைப்பை சேர்ந்தவர்கள், தலைமைச் செயலகம் வந்தனர். தலைமை செயலகத்திலிருந்து, வாகனங்கள் வெளியேறும் வழியில், போலீஸ் பாதுகாப்பு குறைவாக இருந்தது. அவ்வழியே மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள், உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்தனர்.

அவர்களை மீறி, போராட்டத்திற்கு வந்தவர்கள், நுழைய முயன்றதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து, கூடுதல் போலீசார் வந்தனர். அவர்களைக் கண்டதும், போராட்டத்திற்கு வந்தவர்கள், தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக, போலீஸ் வேனில் ஏற்றினர். அவர்கள் வேன் கண்ணாடியை உடைத்தனர். அதை கண்டுகொள்ளாமல், போலீசார் அவர்களை அங்கிருந்து கொண்டு சென்றனர்.

இச்சம்பவத்தால், தலைமைச் செயலகம் முன் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாக, சட்டசபை முற்றுகைப் போராட்டத்திற்கு வருவோரை, போலீசார் பாதி வழியிலே தடுத்து நிறுத்தி, கைது செய்து விடுவர். நேற்று, போலீசார் மெத்தனமாக இருந்ததால், மோதல் சூழல் ஏற்பட்டது. போராட்டம் குறித்த விவரம், கோட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us