தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆய்வுக்கட்டுரை தயாரிக்கும் போட்டி: மாணவர்கள் பங்கேற்று சாதிக்கலாம்

ஆய்வுக்கட்டுரை தயாரிக்கும் போட்டி: மாணவர்கள் பங்கேற்று சாதிக்கலாம்

ஆய்வுக்கட்டுரை தயாரிக்கும் போட்டி: மாணவர்கள் பங்கேற்று சாதிக்கலாம்


UPDATED : ஆக 17, 2013 12:00 AM

ADDED : ஆக 17, 2013 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2013 12:00 AM ADDED : ஆக 17, 2013 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கும் போட்டியில் பங்கேற்க, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ராஜூ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வு, பொது அறிவுக்கான வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகிறது. கோத்தகிரி தாலுகா அளவிலான போட்டிகள் இம்மாதம் 16ம் தேதி, ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் (டயட்) துவக்கப்பட்டன. குன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 19ம் தேதியும், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 20ம் தேதியும், குந்தா தாலுகா அளவிலான போட்டி, 21ம் தேதி மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22ம் தேதியிலும் நடக்கிறது.

இப்போட்டிகளில் நடுநிலைப்பள்ளி 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் இருந்து வகுப்புக்கு ஒருவர் வீதம் கலந்துகொள்ளலாம். இடைநிலைப்பள்ளி பிரிவில் 9, 10ம் இரு வகுப்புகளில் இருந்தும் மூன்று பேர் வீதமும், மேல்நிலைப்பள்ளி பிரிவில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் இருந்து 3 பேர் பங்கேற்கலாம்.

போட்டிகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மாணவர்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது. போட்டியில், நுண்ணறிவு, இயற்பியல், வேதியியல், வானியல், உயிரியல் மற்றும் பொதுஅறிவு ஆகிய சுற்றுகளில் நடத்தப்படுகிறது. தாலுகா அளவிலான போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள், வரும் 31ம் தேதி, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியிலும், மாவட்ட போட்டியில் வெற்றிபெறுபவர்கள் மண்டல மற்றும் மாநில போட்டிகளிலும் பங்கேற்க தகுதி பெறுவர்.

மேலும், மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், ஆண்டுதோறும் மாணவர்கள் இடையே ஆய்வுத் திறனை வளர்க்கும் வகையில், "தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ்" என்ற நிகழ்ச்சி, தேசிய அளவில் நடக்கிறது. சென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஆய்வுக் கட்டுரை தயாரிக்கும் போட்டியில் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறது.

ஐந்து மாணவர்கள், ஒரு வழிக்காட்டி ஆசிரியரின் வழிக்காட்டுதலுடன், மூன்று மாதம் தங்களது ஆய்வுக் கட்டுரையை தயாரிக்கவேண்டும். இந்த ஆண்டிற்கான ஆய்வுத் தலைப்புக்கு, "ஆற்றல், தேடல், கையகப்படுத்தல் மற்றும் சேமித்தல்" என தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இம்மாதம் 31ம் தேதிக்கு முன்பாக பதிவு செய்யவேண்டும்.

மேலும், தகவல் வேண்டுவோர் 94422 17439 என்ற மொபைல் எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ராஜூ கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us