தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் விரைவில் துவக்கப்படுமா?

இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் விரைவில் துவக்கப்படுமா?

இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் விரைவில் துவக்கப்படுமா?


UPDATED : ஆக 18, 2013 12:00 AM

ADDED : ஆக 18, 2013 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2013 12:00 AM ADDED : ஆக 18, 2013 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ், சென்னை, மதுரை, கோவை, திருவையாறு பகுதிகளில், அரசு இசைக் கல்லூரிகள், செயல்பட்டு வருகின்றன. இதில், குரலிசை, வீணை, வயலின், நாதஸ்வரம், தவில், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், புல்லாங்குழல், பரதநாட்டியம், நட்டுவாங்கம், கிராமியக் கலை போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன.

கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களில், கவின் கலைக் கல்லூரிகளும், மாமல்லபுரத்தில் சிற்பக் கலைக் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் நிர்வாகங்களை ஒருங்கிணைக்கவும், பாடப் பிரிவுகளை அதிகப்படுத்தவும், தமிழக அரசு, இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம் அமைக்க உள்ளது. அதற்கான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா, ஏப்ரல் மாதம் சட்டசபையில் அறிவித்தார்.

கலை மற்றும் பண்பாட்டுத் துறையினர், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில், பல்கலை அமைப்பதற்கான இடத்தைத் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us