UPDATED : ஆக 19, 2013 12:00 AM
ADDED : ஆக 19, 2013 08:53 AM
நடப்பு கல்வியாண்டில், பி.எஸ்.சி., நர்சிங் - பி.பார்ம்., - பி.பி.டி., உள்ளிட்ட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளில் சேர, 16 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், இன்று தொடங்குகிறது.
இதற்கான கால அட்டவணை, தரவரிசை பட்டியலை, மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதன்படி, காலை, 9:00 மணிக்கு, முன்னாள் படைவீரர், மாற்றுத் திறனாளிகள் பிரிவுக்கான கலந்தாய்வு துவங்குகிறது. அதைத் தொடர்ந்து, ரேங்க் வரிசை அடிப்படையிலான கலந்தாய்வு நடக்கும்.
இந்த கலந்தாய்வு, செப்., 3ம் தேதி வரை நடக்கிறது. மேலும் விவரங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
