தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.இ.டி., வினாத்தாள் மோசடி: முக்கிய குற்றவாளிகளை நெருங்கும் போலீஸ்

டி.இ.டி., வினாத்தாள் மோசடி: முக்கிய குற்றவாளிகளை நெருங்கும் போலீஸ்

டி.இ.டி., வினாத்தாள் மோசடி: முக்கிய குற்றவாளிகளை நெருங்கும் போலீஸ்


UPDATED : ஆக 19, 2013 12:00 AM

ADDED : ஆக 19, 2013 09:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2013 12:00 AM ADDED : ஆக 19, 2013 09:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் நெருங்கி வருகின்றனர்.

டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக, தளியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் எஸ்.பி.,ஆஸ்ரா கர்க்கிற்கு கொடுத்த தகவலின் பேரில், தனிப்படை டி.எஸ்.பி., பரமேஸ்வரா தலைமையிலான போலீஸார், உத்தனபள்ளி டாஸ்மாக் கண்காணிப்பாளர் கணபதி, 39 அவரது மனைவி எஸ்டர், 33 ஓசூர் அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த கிருஷ்ணப்பா, 42, ஓசூர் அடுத்த பஸ்தியை சேர்ந்த சாக்ஷி தெலுங்கு நாளிதழ் நிருபர் சந்திரசேகர், 33 பாலக்கோட்டை அடுத்த ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த டாஸ்மாக் விற்பனையாளர் அசோகன், 37 மற்றம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டை சேர்ந்த தர்மபுரி வருவாய்த்துறை பயிற்சி பெற்று வரும் இளையராஜா, 30 ஆகிய, ஆறு பேரை நேற்று முன்தினம் கைது செய்து அவர்களிடம் இருந்து, ஏழு லட்சத்து, 80 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வினாத்தாள் மோசடியில், பென்னாகரம் மற்றும் ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் பென்னாகரம் மற்றும் ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மோசடி தொடர்பாக, கைது செய்யப்பட்ட கணபதி, எஸ்டர், கிருஷ்ணப்பா, சந்திரசேகர், அசோகன், இளையராஜா ஆகியோரின் மொபைல்ஃபோன்களில் கடந்த, ஒரு வாரமாக பேசியவர்களின் விபரங்கள் மற்றும் என்ன பேசினார்கள் என்ற விபரங்களையும், தனிப்படை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் நெருங்கி வருதாக, போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் கைது செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் கணபதி, அசோகன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்யவும், குருப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று, வருவாய்த்துறையில் பயிற்சி பெறும் இளையராஜா மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us