தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் மெட்ரிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தனியார் மெட்ரிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தனியார் மெட்ரிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்


UPDATED : ஆக 20, 2013 12:00 AM

ADDED : ஆக 20, 2013 07:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2013 12:00 AM ADDED : ஆக 20, 2013 07:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர்: மதுரை திருநகர் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு, கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது.

இப்பள்ளி பிளஸ் 2 மாணவி ஒருவர், நேற்று காலை பள்ளிக்கு நடந்து சென்றார். பள்ளி அருகே, டூவீலரில் வந்த 25 வயதுள்ள நபர், "பத்தாம் வகுப்பு மாணவியின் லீவ் லெட்டர், இதை வகுப்பில் கொடுத்துவிடு” என்று, அந்த மாணவியின் பெயர், விபரங்களை கூறாமல் சென்றார்.

அந்த கடிதத்தை, தமிழாசிரியர் கட்டப்புளியிடம் மாணவி கொடுத்தார். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. பள்ளி முதல்வர் கார்த்திகாயினி, துணை முதல்வர் பாரதி, போலீசிற்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி., புருஷோத்தமன் தலைமையில் சோதனை நடந்தது.

எஸ்.ஐ., க்கள் பாஸ்கரன், ராஜா மற்றும் போலீசாரின் 2 மணிரேநம் சோதனை முடிவில், புரளி என தெரியவந்தது. மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் எம். கோவிந்தராஜன் கூறியதாவது: அறிமுகம் இல்லாதவர்கள், எது கொடுத்தாலும் மாணவர்கள் வாங்கக்கூடாது. மிரட்டல் விடுபவர்களை கண்டுபிடிக்க போலீஸ், வெடிகுண்டு தடுப்பு போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த ஆலோனைக்கூட்டம் நடைபெறும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us