தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவம் சார் பட்டப்படிப்பு கலந்தாய்வு: முதல் நாளில் 397 பேருக்கு இடம் ஒதுக்கீடு

மருத்துவம் சார் பட்டப்படிப்பு கலந்தாய்வு: முதல் நாளில் 397 பேருக்கு இடம் ஒதுக்கீடு

மருத்துவம் சார் பட்டப்படிப்பு கலந்தாய்வு: முதல் நாளில் 397 பேருக்கு இடம் ஒதுக்கீடு


UPDATED : ஆக 20, 2013 12:00 AM

ADDED : ஆக 20, 2013 07:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2013 12:00 AM ADDED : ஆக 20, 2013 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல் நாளில், 397 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங் - பி.பார்ம்., - பி.பி.டி., உள்ளிட்ட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகள், 13 அரசு கல்லூரிகள், 197 தனியார் கல்லூரிகளிலும் உள்ளன. அரசு கல்லூரிகளில், 475 இடங்களும், தனியார் கல்லூரிகளில், 6,829 இடங்கள் என, மொத்தம், 7,304 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, 16 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

இதற்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், நேற்று துவங்கியது. முதற்கட்டமாக, முன்னாள் படைவீரரின் குழந்தைகள், 149 பேர், மாற்றுத் திறனாளிகள், 19 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ரேங்க் அடிப்படையிலான கலந்தாய்வு துவங்கியது. முதல் நாளில், 728 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்; 410 பேர் மட்டுமே பங்கேற்றனர். அரசு கல்லூரிகள் - 352 பேர், தனியார் கல்லூரிகள் - 45 பேர் என, மொத்தம், 397 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வு, செப்., 3ம் தேதி வரை நடக்கிறது. மேலும் விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us