தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை


UPDATED : ஆக 20, 2013 12:00 AM

ADDED : ஆக 20, 2013 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2013 12:00 AM ADDED : ஆக 20, 2013 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: அருப்புக்கோட்டை அரசு ஐ.டி.ஐ., யில் சேர மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல்வர் உத்தரவுப்படி, அருப்புக்கோட்டையில் புதிதாக, அரசு ஐ.டி.ஐ., துவங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மின்சார பணியாளர், லிப்ட் மெக்கானிக், கம்மியர் (குளிர்பதனம் மற்றும் தட்ப வெப்ப நிலை கட்டுப்படுத்துதல்) ஆகிய இரண்டு ஆண்டு தொழில்பிரிவுகளும், கம்மியர் (இலகு ரக வாகனம் பழுதுநீக்குதல் மற்றும் பராமரிப்பு) பற்றவைப்பவர் ஆகிய ஓராண்டு தொழில் பிரிவும் துவங்கப்பட உள்ளது.

2013-2014 கல்வியாண்டில் துவங்கப்பட உள்ள இத்தொழில் பிரிவு சேர்க்கைக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பற்ற வைப்பவர் தொழில் பிரிவுக்கு, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், ஆக.,24ம் தேதி வரை, விருதுநகர் அரசு ஐ.டி.ஐ.,யில், நேரில் 50 ரூபாய் செலுத்தி விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

அரசு ஐ.டி.ஐ.,யில் சேரும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும், இலவச பஸ் பாஸ், மாதம் 500 ரூபாய் உதவித்தொகை, இலவச லேப்டாப், இரண்டு ஜோடி சீருடைகள், காலனிகள், இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றன.

மேலும் விவரங்களை, விருதுநகர் அரசு ஐ.டி.ஐ.,யில், நேரிலோ அல்லது 04562 - 252 382 என்ற தொலைபேசி எண்ணிலோ கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதனை, மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us