"கல்விக்கடன் பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் அவசியம்"
"கல்விக்கடன் பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் அவசியம்"
UPDATED : ஆக 20, 2013 12:00 AM
ADDED : ஆக 20, 2013 11:12 AM
காஞ்சிபுரம்: "கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், வங்கியில் கடனை திருப்பி செலுத்துவதற்கு வசதியாக, வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்" என, எம்.பி., பேசினார்.
அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் லோக்சபா உறுப்பினர் விஸ்வநாதன் தலைமை தாங்கி, 261 கல்லூரி மாணவ, மாணவியருக்கு 5.4 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக் கடன்களை வழங்கி பேசியதாவது:
இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்காக, இதுவரை, 25 லட்சம் மாணவர்களுக்கு, 52 ஆயிரம் கோடி ரூபாயில், கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர, மத்திய அரசு சார்பில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், படித்த இளைஞர்களுக்கு, இலவச தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் எளிதில் கிடைக்கிறது.
கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், வங்கியில் கடனை திருப்பி செலுத்துவதற்கு வசதியாக, மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து, படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம், கல்விக் கடனை வங்கிகளில் செலுத்துவதற்கு சுலபமாக இருக்கும்." இவ்வாறு, அவர் பேசினார்.
