ரேபரேலியில் பெண்கள் பல்கலை: லோக்சபாவில் மசோதா தாக்கல்
ரேபரேலியில் பெண்கள் பல்கலை: லோக்சபாவில் மசோதா தாக்கல்
UPDATED : ஆக 21, 2013 12:00 AM
ADDED : ஆக 21, 2013 07:54 AM
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: காங்., தலைவர் சோனியாவின், லோக்சபா தொகுதியான, உ.பி., மாநிலத்தில் உள்ள, ரேபரேலியில், பெண்களுக்கான, நாட்டின் முதல் பல்கலையை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரேபரேலி தொகுதியின் முன்னாள் எம்.பி.,யும், முன்னாள் பிரதமருமான, இந்திரா பெயரில், இந்தப் பல்கலை அமைக்கப்பட உள்ளது. மொத்தம், 500 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்தப் பல்கலை யில், பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையிலான, பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
இதற்கான மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், ரேபரேலி தொகுதியில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயரில், பைலட் உள்ளிட்ட, விமானப் போக்குவரத்தில் தொடர்புடையவர்களுக்குப் பயிற்சி அளிக்கும், தேசிய விமானப் போக்குவரத்துப் பல்கலை அமைப்பதற்கான மசோதாவும், லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
