தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயன்படாமல் வீணாகும் மாணவர் விடுதி: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

பயன்படாமல் வீணாகும் மாணவர் விடுதி: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

பயன்படாமல் வீணாகும் மாணவர் விடுதி: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?


UPDATED : ஆக 21, 2013 12:00 AM

ADDED : ஆக 21, 2013 10:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2013 12:00 AM ADDED : ஆக 21, 2013 10:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதூர்: செங்காடு ஆதி திராவிட நல விடுதியில், இரவு நேரங்களில் மாணவர்கள் தங்காததாலும், இரவு நேர காவலர் பணியிடம் காலியாக உள்ளதாலும், சமூக விரோதிகள் கூடாரமாக மாறி வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில், செங்காடு, ஸ்ரீபெரும்புதூர், சோமங்கலம், குன்றத்தூர், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கி, படிப்பதற்கு வசதியாக, ஆதி திராவிட நலத்துறை சார்பில், மாணவர்கள் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், பெரும்பாலான விடுதிகளில், போதிய பாதுகாப்பின்மை, வார்டன், இரவு நேர காவலர், சமையலர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதால், விடுதிகளில், மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

செங்காடு, உயர்நிலைப் பள்ளியில் பயிலும், ஆதி திராவிட மாணவர்களின் வசதிக்காக, பள்ளி எதிரே கடந்த 1985ம் ஆண்டு, விடுதி திறக்கப்பட்டது. இதில், 50 மாணவர்கள் தங்கி படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளியில்  மாணவர்கள் எண்ணிக்கை குறைவால், நல விடுதியில், மாணவர்கள் தங்கி படிப்பதும் குறைந்து விட்டது. தற்போது, 15 மாணவர்கள் மட்டுமே விடுதியில் சேர்ந்துள்ளனர். இவர்களும், அதே கிராமத்தை சேர்ந்தவர்கள்.

இதனால், மாணவர்கள் இரவு நேரத்தில், விடுதியில் தங்குவது கிடையாது. மதிய உணவுக்கு மட்டும் மாணவர்கள் விடுதிக்கு வருகின்றனர். இதனால், ஊழியர்களும், விடுதியை பூட்டிச் சென்று  விடுகின்றனர்.

இதை சாதகமாக பயன்படுத்தி, அங்குள்ள சமூக விரோதிகள் சிலர், இரவு நேரத்தில், விடுதி வளாகத்தில் புகுந்து, மது அருந்தி வருகின்றனர். எனவே, விடுதியில், இரவு நேர காவலர் பணிபுரிய வேண்டும், மாணவர்கள் தங்கி படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காலியாக உள்ள விடுதி வார்டன் பணியிடத்தை நிரப்ப வேண்டும், சமூக விரோதிகளிடமிருந்து விடுதியை காக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us