தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் தொழில்நுட்பக்கல்லூரி: குடுமியான்மலையில் தொடர்ந்து இயங்க கோரிக்கை

வேளாண் தொழில்நுட்பக்கல்லூரி: குடுமியான்மலையில் தொடர்ந்து இயங்க கோரிக்கை

வேளாண் தொழில்நுட்பக்கல்லூரி: குடுமியான்மலையில் தொடர்ந்து இயங்க கோரிக்கை


UPDATED : ஆக 21, 2013 12:00 AM

ADDED : ஆக 21, 2013 11:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2013 12:00 AM ADDED : ஆக 21, 2013 11:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: "குடுமியான்மலையில் இயங்கிவரும் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி இடமாற்றம் செய்யும் முயற்சியை கைவிட்டு அதே இடத்தில் தொடர்ந்து இயங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா குடுமியான்மலை வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாகும். இங்குள்ள குடவறை கோவில் இப்பகுதிக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. 

இப்பகுதியில் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கிவரும் அண்ணா பண்ணை, தோட்டக்கலை பண்ணை, ஸ்டாமின் பயிற்சி மையம், மத்திய தரக்கட்டுப்பாடு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அலுவலகங்கள், நுண்ணுயிர் உர உற்பத்தி மையம், மண்புழு உர தயாரிப்பு மையம், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், ஆடிட்டோரியம், அடுக்குமாடி குடியிருப்புகள், வாகனங்கள் நிறுத்துமிடம், நாற்றுகள் உற்பத்தி மையம், தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தி மையம் போன்றவை உள்ளது.

கிட்டத்தட்ட 1,017 ஏக்கரில் இயங்கிவரும் இந்த அலுவலகங்களில் பல பிரிவுகள் போதிய பராமரிப்பின்றியும், பயன்படுத்தப்படாமலும் பல ஆண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஸ்டாமின் பிரவுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் பயன்பாடின்றி பாழடைந்த கட்டிடங்களாக புதர்மண்டி காணப்படுகிறது. குடிநீர் மற்றும் பாசனத்துக்காக மின் மோட்டார் வசதியுடன் 39 திறந்தவெளி கிணறு உள்ளது. வறட்சி காலங்களிலும் இந்த கிணறுகளில் தண்ணீர் மட்டம் குறைவதில்லை.

இவ்வாறு அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற குடுமியான்மலை அண்ணா பண்ணை வளாகத்தில் அரசு சார்பில் வேளாண் கல்லூரி அமைக்கவேண்டும் என்பதே புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

கடந்த 2001 சட்டசபை பொதுத்தேர்தலின் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும் என அ.தி.மு.க., தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இரண்டாண்டு கடந்தும் வேளாண்மை கல்லூரி அமைவதற்கான சுவடு தென்படவில்லை.

விவசாய பட்டயப் படிப்புக்கான வேளாண் தொழிநுட்ப கல்லூரி அமைக்க அரசு அனுமதி வழங்கியது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் சார்பில், கடந்த ஆண்டு(2012) குடுமியான்மலை அண்ணா பண்ணை வளாகத்தில் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி துவங்கப்பட்டது.

இதில், தகுதி அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விரைவில் வகுப்பு துவங்க உள்ளது.

மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் போதுமானதாக இல்லாததால் ஸ்டாமின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்புகள் மற்றும் உணவு விடுதிகளை வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரிக்கு வழங்கவேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு ஸ்டாமின் முன்வராததால் மாணவர்களின் நலன்கருதி குடுமியான்மலை வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரியை வம்பன் அறிவியல் ஆராய்ச்சி மையத்துக்கு இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளது.

இவை குடுமியான்மலை பகுதி மக்களுக்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின் கிடைத்த வாய்ப்பை பறிகொடுக்க அப்பகுதி மக்கள் தயாராக இல்லை. குடியான்மலை வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி அதே பகுதியில் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர், அரசுத்துறை உயர் அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us