தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயங்கரவாதிகளின் பயிற்சி கூடமாக திகழும் பாக்., இஸ்லாமிய பள்ளி

பயங்கரவாதிகளின் பயிற்சி கூடமாக திகழும் பாக்., இஸ்லாமிய பள்ளி

பயங்கரவாதிகளின் பயிற்சி கூடமாக திகழும் பாக்., இஸ்லாமிய பள்ளி


UPDATED : ஆக 22, 2013 12:00 AM

ADDED : ஆக 22, 2013 07:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2013 12:00 AM ADDED : ஆக 22, 2013 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள, ஒரு இஸ்லாமிய பள்ளியை, பயங்கரவாதிகளின் பயிற்சிக் கூடமாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.

மும்பையில், 2008ல் நடந்த, பயங்கரவாத தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். தாஜ், ஓபராய் உள்ளிட்ட, நட்சத்திர ஓட்டல்களில் தங்கியிருந்த, ஆறு அமெரிக்கர்களும், இந்த சம்பவத்தில் பலியாயினர். இந்த சம்பவத்துக்கு, சதி திட்டம் தீட்டி கொடுத்த, பாகிஸ்தானை சேர்ந்த, டேவிட் கோல்மேன் ஹெட்லி, தகவுர் ராணா ஆகியோர், அமெரிக்காவின், சிகாகோ நகரில், 2009ல், கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு பின் புலத்தில், பாகிஸ்தானிய இஸ்லாமிய பள்ளி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின், பெஷாவர் நகரில், கஞ்ச் மதரசா என்ற பெயரில், இஸ்லாமிய பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது.

இந்த பள்ளிக்கூடத்தில், அல்-குவைதா, தலிபான், லஷ்கர் -இ- தொய்பா உள்ளிட்ட, பயங்கரவாத அமைப்புகளுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள், இந்த மதரசாவில் தான் தேர்வு செய்யப்பட்டு, ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர். மதரசாவின் தலைவர், அமினுல்லா. இவர், 2009ல், ஐ.நா.,சபையால், பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்.

இந்த இஸ்லாமிய பள்ளிக்கு கிடைக்கும் நன்கொடைகளை, மூன்று பயங்கரவாத அமைப்புகளுக்கு, இவர் வழங்கி வந்துள்ளார். அறப்பணிக்காக அளிக்கப்படும் நிதியை, பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தி வரும், இந்த பள்ளியுடன், அமெரிக்கர்கள் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது. இவ்வாறு, அமெரிக்க நிதியமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us