காந்தி கிராம் கிராமிய பல்கலை துணைவேந்தர் பதவி அறிவிப்பு
காந்தி கிராம் கிராமிய பல்கலை துணைவேந்தர் பதவி அறிவிப்பு
UPDATED : ஆக 22, 2013 12:00 AM
ADDED : ஆக 22, 2013 07:18 AM
சென்னை: "காந்தி கிராம் கிராமிய பல்கலையின் துணைவேந்தர் பதவிக்கு, தகுதி வாய்ந்தவர்கள், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்" என தேர்வுக்குழு தலைவர் பாலகுருசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு: மத்திய அரசு, காந்தி கிராம் கிராமிய பல்கலையில், துணைவேந்தரை நியமனம் செய்ய, தேர்வுக்குழுவை நியமித்துள்ளது. கல்வி மற்றும் நிர்வாகத்தில், முத்திரை பதித்தவர்கள், பல்கலை பேராசிரியர் நிலையில், குறைந்தபட்சம் 10 ஆண்டு பணி புரிந்தவர்கள், துணைவேந்தர் பதவிக்கு வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை பல்கலை பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். விரிவான, பயோ-டேட்டா மற்றும் அனுபவம், சாதனைகள் குறித்து ஐந்து பக்கங்களில் தெரிவிக்கலாம். துணைவேந்தர் பதவிக்கு, தான் தகுதியானவர் தான் என்பதை, எழுத்துப்பூர்வமாக விளக்க வேண்டும். பல்கலையை, தேசிய அளவில், மிகச்சிறந்த பல்கலையாக கொண்டு செல்வதற்கான திட்டங்கள் குறித்தும், விளக்க வேண்டும். இவ்வாறு பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
