UPDATED : ஆக 22, 2013 12:00 AM
ADDED : ஆக 22, 2013 07:41 AM
சென்னை: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியை, முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் முறையில் இன்று திறந்து வைக்கிறார்.
திருவண்ணாமலையில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைகிறது. இதில், 100 இடங்களை நிரப்ப, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது. 15 இடங்களில் மத்திய அரசு ஒதுக்கீடு போக, மீதமுள்ள 85 இடங்கள், எம்.பி.பி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வில், ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், புதிய மருத்துவக் கல்லூரி எப்போது துவங்கும் என மருத்துவ மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில், திருவண்ணாமலை புதிய அரசு மருத்துவக் கல்லூரி இன்று காலை திறக்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் முறையில், கல்லூரியை திறந்து வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை மருத்துவக் கல்வி இயக்ககம் செய்து வருகிறது. "கல்லூரி திறக்கும் இன்றே, வகுப்புகளும் துவங்கும்" என, அறிவிக்கப்பட்டுள்ளது.
