தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இடநெருக்கடி; பதிவு செய்ய வருபவர்கள் தவிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இடநெருக்கடி; பதிவு செய்ய வருபவர்கள் தவிப்பு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இடநெருக்கடி; பதிவு செய்ய வருபவர்கள் தவிப்பு


UPDATED : ஆக 22, 2013 12:00 AM

ADDED : ஆக 22, 2013 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2013 12:00 AM ADDED : ஆக 22, 2013 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, போதிய இட வசதி இன்றி மாடியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு வரும் மக்கள் இடநெருக்கடியில், சிக்கி தவிக்கும் அவலம் நீடித்துள்ளது. தவிர, மாற்றுத்திறனாளிகள் பாடு திண்டாட்டமாக உள்ளது.

ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வரும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு, தினமும் 400க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

பத்தாம் வகுப்பு கல்வி தகுதிக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் கல்வி சான்று பதிவு, பதிவு மூப்பு, கூடுதல் கல்வி தகுதி பதிவு, விடுபட்ட பதிவை புதுப்பித்தல், வேலை வாய்ப்பற்ற இளைஞர் உதவி தொகை உட்பட பல காரணங்களாக வந்து செல்கின்றனர்.

மாடியில் இடநெருக்கடி மிகுந்த இடத்தில் அலுவலகம் செயல்பட்டு வருவதால், இங்கு வருவோர் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் பாடு திண்டாட்டமாக உள்ளது. இருக்கை வசதி கூட இல்லை. பெரும்பாலானோர் நின்று கொண்டே, இருக்க வேண்டி உள்ளது.

கழிப்பிட வசதி இல்லாததால், இங்கு வருவோர் அவசர நேரங்களில் வேறிடம் தேடி ஓடுவது அன்றாட நிகழ்வு. புரோக்கர்கள் தலையீடு அதிகம் இருப்பதால், மக்கள் பணத்தை இழந்து தவிக்கும் கொடுமையும் சகஜம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த மாவட்டவேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு, சொந்த கட்டடம் எப்போது கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. இக்குறையை போக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், ஹரிஹரன் பாபு கூறியதாவது: "ராமநாதபுரம் மாவட்ட நூலகம் அருகே புது கட்டடம் கட்டுவதற்கு, 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன், நூலகம் கட்டுவதற்கு சட்டசபையில் ஒன்றரை கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டது. இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்வதின் மூலம், நிதி விரைந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி வந்தவுடன், விரைவில் டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணி துவங்கிவிடும்," என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us