தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருவண்ணாமலையில் 19வது அரசு மருத்துவ கல்லூரி திறப்பு

திருவண்ணாமலையில் 19வது அரசு மருத்துவ கல்லூரி திறப்பு

திருவண்ணாமலையில் 19வது அரசு மருத்துவ கல்லூரி திறப்பு


UPDATED : ஆக 23, 2013 12:00 AM

ADDED : ஆக 23, 2013 08:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2013 12:00 AM ADDED : ஆக 23, 2013 08:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: திருவண்ணாமலையில், 73.16 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள, 19வது அரசு மருத்துவக் கல்லூரியை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரி துவக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டங்களின் ஒன்றான, திருவண்ணாமலையில், அரசு மருத்துவக் கல்லூரி துவக்க, 25 ஏக்கர் நிலம் ஒதுக்கி, இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி, 73.16 கோடி ரூபாய் மதிப்பில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில், நிர்வாக கட்டடம், தொழில் முறை பணியாளர்கள் கூடம், மாணவர்கள் தங்கும் விடுதி, நூலகம், ஆகியவற்றுக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான, மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், இதரப் பணியாளர்கள் என, 192 நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைக்குத் தேவையான, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய, 16.82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால், கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது.

மாணவர் சேர்க்கை : திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில், நடப்பு கல்வியாண்டில், இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி பெற்று, 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், கடந்த ஆண்டு, 2,145 மருத்துவ இடங்கள் இருந்தன.

தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக, நடப்பு கல்வியாண்டில், புதிதாக, 410 கூடுதல் மருத்துவ இடங்களுக்கான, மாணவர்கள் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திற்கான மருத்துவ இடங்கள், 2,555 ஆக உயர்ந்துள்ளது.

26ம் தேதி வகுப்புகள் துவக்கம் : திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில், இடம் பெற்றுள்ள மாணவர்கள், வரும் 26ம் தேதி, கல்லூரி முதல்வரை சந்தித்து, கல்லூரியில் சேர வேண்டும். அன்றே வகுப்புகள் துவங்கும் என, தேர்வுக்குழு செயலர் அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us