தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில் பயிற்சி சான்றிதழ்கள் கேட்பாரற்று கிடந்த அவலம்

தொழில் பயிற்சி சான்றிதழ்கள் கேட்பாரற்று கிடந்த அவலம்

தொழில் பயிற்சி சான்றிதழ்கள் கேட்பாரற்று கிடந்த அவலம்


UPDATED : ஆக 24, 2013 12:00 AM

ADDED : ஆக 24, 2013 09:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2013 12:00 AM ADDED : ஆக 24, 2013 09:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊரக வளர்ச்சி துறையின் கீழ், கிராம பெண்கள் முன்னேற்றத்திற்கு, 2005ல், தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. ரெடிமேட் ஆடை தயாரிப்பு போன்ற பயிற்சிகள், அதே ஆண்டு, ஜூலை 15 முதல் 22 வரை நடந்து உள்ளது. இதற்கான சான்றிதழ்கள், சம்பந்தப்பட்டவர்களில் பலருக்கு, வழங்கப்பட வில்லை. தற்போது இந்த சான்றிதழ்கள், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், சிதறி கிடந்தன.

பயிற்சி பெற்ற பெண்களின் போட்டோ ,பெயர், கிராமம், வட்டம் போன்ற தகவல்களும் இதில் உள்ளன. சான்றிதழின் மேல், தமிழக அரசின் முத்திரை உள்ளது. இதில் அப்போதைய கலெக்டர் முகமது அஸ்லம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலர் கையெழுத்தும் உள்ளது. இதோடு,பயிற்சி அளித்த நிறுவனத்தின் முத்திரையும் காணப்பட்டது.

அரசின் வாயிலாக தொழில் பயிற்சி பெற்றவர்கள், அதற்கான சான்றிதழ் கிடைத்தால்தான், பொருளாதார ரீதியாக முன்னேறி, தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும். பெண்களின் முன்னேற்றத்தை முக்கியமாக கருதும் அரசு, அவர்களுக்கான, பயிற்சி சான்றிதழ்களை,வழங்காமல் இப்படி கேட்பாரற்று போட்டுள்ளது, பயற்சி பெற்ற பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஒன்றிய அலுவலக வளாக பொருட்கள் அறையில்,பிறர் பார்க்கும் வகையில்,சிதறி கிடந்த,இந்த சான்றிதழ்கள் குறித்து , ஒன்றிய அலுவலக அதிகாரியிடம் கேட்க, அனைத்தும் உடனடியாக, அப்புறப்படுத்தப்பட்டன. பி.டி.ஓ.,ஜெயலட்சுமி, "இந்த சான்றிதழ்கள், 2005ல் வழங்க வேண்டியவை. இடையில் மராமத்து பணிகள் நடந்தது. அப்போது, இடம் மாறியிருக்கலாம். சில மாதங்களுக்கு முன் தான், இங்கு பணிக்கு வந்து உள்ளேன். தகவல் கிடைத்தவுடன், ஒன்றிய அலுவலர்கள் மூலம், சான்றிதழ் சேகரிக்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்களிடம், ஒப்படைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us