தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு: முதல் நாளில் பாதி பேர் ஆப்சென்ட்

கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு: முதல் நாளில் பாதி பேர் ஆப்சென்ட்

கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு: முதல் நாளில் பாதி பேர் ஆப்சென்ட்


UPDATED : ஆக 24, 2013 12:00 AM

ADDED : ஆக 24, 2013 09:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2013 12:00 AM ADDED : ஆக 24, 2013 09:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முதல் நாள் கலந்தாய்வில், அழைக்கப்பட்டவர்களில் பாதி பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில், கால்நடை மருத்துவ அறிவியல், மீன்வள அறிவியல், உணவு தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட இளநிலை படிப்புகளில், 360 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு, சென்னை, வேப்பேரி, கால்நடை மருத்துவக் கல்லூரியில், நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது.

முதல் நாளான நேற்று, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் உள்ள, ஆறு இடங்கள்; முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் ஒதுக்கீட்டில் உள்ள, இரண்டு இடங்கள்; விளையாட்டு வீரர்கள் பிரிவில் உள்ள, ஐந்து இடங்கள் என, மொத்தமுள்ள, 13 இடங்களுக்கு, கலந்தாய்வு நடந்தது. இதற்கு மொத்தம், 84 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதில், 42 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு முடிவில், முன்னாள் படைவீரர்கள் ஒதுக்கீட்டில், இரண்டு இடங்களும், விளையாட்டு வீரர்கள் பிரிவில், ஐந்து இடங்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் மூன்று இடங்கள் என, மொத்தமுள்ள, 13 இடங்களில், 10 இடங்கள் நிரப்பப்பட்டன. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, வரும், 26, 27ம் தேதிகளில் நடக்கிறது. 26ம் தேதி நடைபெறும் கலந்தாய்வில், கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் உள்ள, 200 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 27ம் தேதி நடைபெறும் கலந்தாய்வில், மீன்வள அறிவியல், உணவு தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்பில் உள்ள, 80 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வரும், 26ம் தேதி நடைபெறும் கலந்தாய்வில், கால்நடை துறை அமைச்சர் சின்னையா, முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை ஆணைகளை வழங்க உள்ளார்.

இதுகுறித்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருநாவுக்கரசு கூறுகையில், "மாற்றுத்திறனாளிகள் பிரிவில் நிரப்பப்படாமல் உள்ள, மூன்று இடங்கள், வரும், 26ம் தேதி நடக்கும் பொது பிரிவு கலந்தாய்வில் நிரப்பப்படும். கால்நடை மருத்துவ அறிவியல் தொழில் பிரிவில் உள்ள, 10 இடங்களும் கலந்தாய்வில் நிரப்பப்பட்டன" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us