பெரியார் பல்கலை.,: துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான உறுப்பினர்கள் தேர்வு
பெரியார் பல்கலை.,: துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான உறுப்பினர்கள் தேர்வு
UPDATED : ஆக 24, 2013 12:00 AM
ADDED : ஆக 24, 2013 10:42 AM
சேலம்: சேலம் பெரியார் பல்கலையில் புதிய துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினருக்கான தேர்தல் நேற்று நடந்தது.
சேலம் பெரியார் பல்கலையின், துணைவேந்தராக உள்ள முத்துச்செழியன், பதவிக்காலம் செப்டம்பர், 7ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் நடவடிக்கை கடந்த மாதம் துவங்கியது.
இதில் தேர்வுக்குழுவில் சிண்டிகேட் குழு சார்பில், ஒருவரும், செனட் குழு சார்பில் ஒருவரும் இடம்பிடிப்பது வழக்கம். இதில் சிண்டிகேட் குழு சார்பில், ஏ.வி.எஸ்., கல்லூரி செயலாளர் ராஜவிநாயகம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
செனட் குழு சார்பில் தேர்வுக்குழுவில் இடம்பெற, நேற்று தேர்தல் நடந்தது. இதில் ஆத்தூர் பாரதியார் கல்லூரி செயலாளர் ராமசாமி மற்றும் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முத்துசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.
செனட் சார்பில், 126 ஓட்டுகள் இருந்த நிலையில், நேற்று நடந்த தேர்தலில், 97 ஓட்டு பதிவாகின. இதில் ராமசாமி, 82 ஓட்டுகளை பெற்று, தேர்வுக்குழுவில் இடம்பிடித்தார். எதிர்த்து போட்டியிட்ட முத்துசாமி, 13 ஓட்டுகளை பெற்றார். இரண்டு ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
