கால்நடை மருத்துவ படிப்பு: பொது பிரிவு கலந்தாய்வு துவக்கம்
கால்நடை மருத்துவ படிப்பு: பொது பிரிவு கலந்தாய்வு துவக்கம்
UPDATED : ஆக 26, 2013 12:00 AM
ADDED : ஆக 26, 2013 08:03 AM
சென்னை : கால்நடை மருத்துவப் படிப்பிற்கான பொது பிரிவு கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது.
சென்னை, வேப்பேரி, கால்நடை மருத்துவக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, 23ம் தேதி துவங்கியது. முதல் நாள் கலந்தாய்வில், சிறப்பு இடங்களில் உள்ள, 13 இடங்களில், 10 இடங்களும், கால்நடை மருத்துவ அறிவியல் - தொழில்பிரிவு படிப்பில் உள்ள, 10 இடங்களும் நிரம்பின. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.
பி.வி.எஸ்சி.,- கலையியல் பிரிவு படிப்பிற்கான கலந்தாய்வு இன்றும், பி.எப்.எஸ்சி., - பி.டெக்., - உணவு தொழில்நுட்பம், பி.டெக்., - கோழியின உற்பத்தி தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் பி.எப்.எஸ்சி.,- தொழில் பிரிவு படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நாளையும் நடைபெற உள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, காலை, 10:30 மணிக்கு துவங்குகிறது.
