தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு "டோயன்ஸ் ஆஃப் மெட்ராஸ்" விருது

சென்னையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு "டோயன்ஸ் ஆஃப் மெட்ராஸ்" விருது

சென்னையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு "டோயன்ஸ் ஆஃப் மெட்ராஸ்" விருது


UPDATED : ஆக 26, 2013 12:00 AM

ADDED : ஆக 26, 2013 02:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2013 12:00 AM ADDED : ஆக 26, 2013 02:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: விருந்தோம்பல் துறையில் இருந்து வரும் "அம்பாசடர் பல்லவா" சென்னையின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், குறிப்பிட்ட சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து கெளரவப்படுத்த முடிவு செய்து இருக்கிறது.

இந்த ஆண்டு நடத்தப்படும் விருது வழங்கும் விழா குறித்து "அம்பாசடர் பல்லவா"வின் பொது மேலாளர் க்ரிதிவாசன் கூறியதாவது:

"நாற்பது ஆண்டுகளாக விருந்தோம்பல் துறையில் சாதனை படைத்து வரும் எங்கள் நிறுவனம், சென்னையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பல்வேறு துறை சார்ந்த சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து "டோயன்ஸ் ஆஃப் மெட்ராஸ்" என்ற விருதை வழங்க இருக்கிறது.

இந்த ஆண்டு விருதுக்கு டாக்டர். வி. சாந்தா, தலைவர், கேன்சர் இன்ஸ்டிடீயூட், டாக்டர். எஸ்.எஸ். பத்ரிநாத், தலைவர் சங்கரா நேத்ராலயா, கிரிஷ் ஷிரிகாந்த், முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர், டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், டாக்டர். எம். நரேந்திரா, நிர்வாக இயக்குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, டாக்டர். இ. பாலகுருசுவாமி, முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா, நிர்வாக இயக்குநர், சுந்தரம் பாஸ்டனர்ஸ் ஆகியோரை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 29ம் தேதியன்று மாலையில் "அம்பாசடர் பல்லவா"வில் நடைபெறும். அதே போன்று ஓவியர்கள் தங்கள் படைப்புகளை எங்கள் விடுதியில் 15 நாட்கள் இலவசமாக பார்வைக்கு வைப்பதற்கு இடம் ஒதுக்கியும் கொடுக்கிறோம்." என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us