வரும் 29ல் "வீட்டு ஒயரிங்" இலவச பயிற்சி: ஐ.ஓ.பி., வேலைவாய்ப்பு மையம் ஏற்பாடு
வரும் 29ல் "வீட்டு ஒயரிங்" இலவச பயிற்சி: ஐ.ஓ.பி., வேலைவாய்ப்பு மையம் ஏற்பாடு
UPDATED : ஆக 26, 2013 12:00 AM
ADDED : ஆக 26, 2013 02:27 PM
தஞ்சாவூர்: "தஞ்சையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் 29ம் தேதி வீட்டு ஒயரிங், மோட்டார் ரீவைண்டிங் மற்றும் மின்சாதன பொருள் பழுது நீக்கும் இலவச பயிற்சி துவங்குகிறது" என, பயிற்சி மையத்தின் இயக்குனர் வெற்றிச்செல்வன் கூறியுள்ளார்.
தஞ்சை ஐ.ஓ.பி., கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் வெற்றிச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
தஞ்சையில், மருத்துவக்கல்லூரி ரோட்டில் ஈஸ்வரி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் பக்கிரிசாமி வீதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இயங்கி வருகிறது.
இங்கு, வருவாய் ஈட்டக்கூடிய வகையில் இலவச தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இம்மையத்தில் நபார்டு நிதியுதவியுடன் 25 பேர்களுக்கு இலவசமாக வீட்டு வயரிங், மோட்டார் ரீவைண்டிங் மற்றும் மின்சாதன பொருட்கள் பழுது நீக்குதல் பயிற்சி வரும் 29ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து, 30 நாட்களுக்கு நடக்கிறது.
நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடக்கும். பயிற்சியில் பங்கேற்று தகுதி பெறும் அனைவருக்கும் பயிற்சி மையத்தில் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி நடக்கும் காலத்தில் மதிய உணவு மற்றும் தேவையான பயிற்சி பொருட்கள் அனைத்தும் மையத்தில் வழங்கப்படும். பயிற்சிக்கு கட்டணம் ஏதும் தேவையில்லை.
பயிற்சியில் சேர விரும்புவோர், 29ம் தேதி மையத்தில் காலை 9:30 மணிக்கு நடக்கும் நேர்முகத்தேர்வில் பங்கேற்க வேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு மத்திய அரசின் தொழிற்பயிற்சி சான்றிதழ் பெறுவதற்கும் அரசு திட்டத்தில் மானியத்துடன் வங்கி கடன் பெற்று சுயதொழில் துவங்குவதற்கும் உரிய வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கப்படும்.
நேர்முகத்தேர்வில் பங்கேற்க எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ், ரேஷன் கார்டு ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
மேலும், சந்தேகங்களை, மைய ஃபோன் 04362 242377, 242376 ஆகிய நம்பர்களில் தொடர்பு கொண்டு அறியலாம்." இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
