தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது"

"வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது"

"வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது"


UPDATED : ஆக 26, 2013 12:00 AM

ADDED : ஆக 26, 2013 02:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2013 12:00 AM ADDED : ஆக 26, 2013 02:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: "வாய்ப்புகளை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்வதில்தான் அவர்களுடைய வெற்றி இருக்கிறது" என, தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.

அன்னை தெரசாவின் 103வது பிறந்த நாளையொட்டி தஞ்சாவூரில் மதர் தெரசா பவுண்டேசன் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான ஜெயிப்பது நிச்சயம் என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. மதர் தெரசா பவுண்டேசன் தலைவர் சவரிமுத்து வரவேற்றார்.

கலெக்டர் பாஸ்கரன் பேசியதாவது: "மாணவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான காலகட்டம் பிளஸ் 2 படிப்பு. இந்த காலக்கட்டத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்வதைப் பொருத்து அவர்களுடைய வெற்றி அடங்கியுள்ளது.

எவ்வளவு விஷயங்களை நாம் தெரிந்து கொள்கிறோமோ அந்த வகையில் திறமை வெளிப்படும். இதன்மூலம் விரும்பிய படிப்பைத் தேர்ந்தெடுக்க முடியும்.

எனவே, இதை நிறைவேற்ற வேண்டிய வழிமுறைகளை மாணவர்கள் இப்போதே தொடங்க வேண்டும். மாணவர் பருவம்தான் வாழ்க்கையை திசை திருப்பக்கூடியது. எனவே, அக்காலக்கட்டத்தில் மாணவர்கள் மிகவும் கட்டுப்பாடுடனும், ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டிய நிலை உருவாகும்.

மாணவர்கள் அனைவருக்கும் ஒரே வாய்ப்புதான் கிடைகிறது. அந்த வாய்ப்புகளை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்வதில்தான் அவர்களுடைய வெற்றி இருக்கிறது." இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் பேசினார்.

தொடர்ந்து ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சென்னை மேலாண்மை ஆலோசகர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us