தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு: நாமக்கல் மாணவி முதலிடம்

கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு: நாமக்கல் மாணவி முதலிடம்

கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு: நாமக்கல் மாணவி முதலிடம்


UPDATED : ஆக 27, 2013 12:00 AM

ADDED : ஆக 27, 2013 08:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2013 12:00 AM ADDED : ஆக 27, 2013 08:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில், நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி சீதா, 197.50, கட்-ஆப் மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்றார். நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியை அவர் தேர்வு செய்துள்ளார்.

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தேர்வு பட்டியல், சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் நேற்று வெளியிடப்பட்டது. கால்நடை மருத்துவ படிப்பில் உள்ள, 360 இடங்களுக்கு, 15 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தகுதியின் அடிப்படையில், 14 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள் ளப்பட்டன. மாணவர் சேர்க்கைக்காக, இடஒதுக்கீடு அடிப்படையில், கட்-ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டது.

இதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சீதா, 200க்கு, 197.50 கட்-ஆப் மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், தர்மபுரியை சேர்ந்த பவித்ரா, 197 கட்-ஆப் மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், திருப்பூரை சேர்ந்த கார்த்திகா, 197 கட்-ஆப் மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர். முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவியரும், நாமக்கல் கல்லூரியை தேர்வு செய்தனர்.

இவர்களுக்கான, சேர்க்கை ஆணையை, கால்நடை துறை அமைச்சர் சின்னையா வழங்கினார். பொது பிரிவில் உள்ள, 153 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில், 341 மாணவர் கலந்து கொண்டனர்; அனைத்து இடங்களும் நிரம்பின.

பி.எப்.எஸ்சி., - பி.டெக்., - உணவு தொழில்நுட்பம், பி.டெக்., - கோழியின உற்பத்தி தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் பி.எப்.எஸ்சி., - தொழில் பிரிவு படிப்புகளுக்கான, 80 இடங்களுக்கு கலந்தாய்வு இன்று நடக்கிறது.

கால்நடை மருத்துவ படிப்பில் முதலிடம் பெற்ற, நாமக்கல் மாணவி சீதா கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தின் கிராமப்புற பகுதியில் இருந்து வருகிறேன். ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வீட்டில் வளர்க்கிறோம். சிறு வயது முதலே கால்நடைகள் மீது பாசம் உண்டு.

மருத்துவ படிப்பு, கால்நடை மருத்துவ படிப்பு இரண்டிற்கும் விண்ணப்பித்திருந்தேன். மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. ஆனால், கால்நடைகள் மீதான அக்கறையால், மருத்துவ படிப்பை விரும்பாமல், கால்நடை மருத்துவத்தை தேர்வு செய்துள்ளேன். இவ்வாறு, மாணவி சீதா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us