திருப்பூருக்கு மருத்துவ கல்லூரி தேவை: ஏ.ஐ.ஒய்.எப்., மாநாட்டில் வலியுறுத்தல்
திருப்பூருக்கு மருத்துவ கல்லூரி தேவை: ஏ.ஐ.ஒய்.எப்., மாநாட்டில் வலியுறுத்தல்
UPDATED : ஆக 27, 2013 12:00 AM
ADDED : ஆக 27, 2013 10:48 AM
திருப்பூர்: "திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை, அரசு அமைக்க வேண்டும்," என, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் தெற்கு வட்டார ஒன்பதாவது மாநாடு, ராக்கியாபாளையம் கணபதி மஹாலில் நடந்தது. தியாகிகள் ஜோதி அணிவகுப்பை தொடர்ந்து, மாநாட்டில் "மாணவர்கள் கல்விக்கு தேவையான உதவியை, வங்கிகள் தடையின்றி வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு, விரைவில் வேலை வழங்க வேண்டும். அனைத்து வசதிகளுடன் விளையாட்டு மற்றும் உடற் பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளை அமைக்க வேண்டும்; மருத்துவ வசதிகளை செய்து, டாக்டர் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களை நியமிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மணவியருக்கு பாலியல் தொல்லை தரும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும்," என, மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
