தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தகத் திருவிழா: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

புத்தகத் திருவிழா: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

புத்தகத் திருவிழா: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு


UPDATED : ஆக 28, 2013 12:00 AM

ADDED : ஆக 28, 2013 07:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2013 12:00 AM ADDED : ஆக 28, 2013 07:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் நடக்கும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள், செப்., 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கின்றன.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளதாவது: மதுரை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் செப்., 4ல், காலை 11 மணிக்கு நடக்கின்றன. "பொய்மைச் சிறுமதி போக்கு" என்ற தலைப்பில் பேசவேண்டும். ஒரு பள்ளிக்கு இருவர் மட்டும் பங்கேற்கலாம்.

இதற்கு, தலைமையாசிரியர் பரிந்துரைத்த கடிதத்துடன் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். முதல் பரிசு ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.ஆயிரம். கல்லூரி மாணவர்களுக்கு "தமிழா பேதைமை அகற்று" என்ற தலைப்பில், செப்., 5ல் பேச்சுப் போட்டி நடக்கிறது. கல்லூரிக்கு மூவர் மட்டும் பங்கேற்கலாம். முதல் பரிசு ரூ.5 ஆயிரம். 2ம் பரிசு ரூ.3 ஆயிரம். மூன்றாவது பரிசு ரூ.2 ஆயிரம்.

பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், பரிந்துரை கடிதத்துடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: போட்டி ஒருங்கிணைப்பாளர், சர்வோதய இலக்கிய பண்ணை, 32/1, மேலவெளி வீதி, மதுரை-1. பரிசுத் தொகை, பரிசு கூப்பன்களாக வழங்கப்படும். அதன்மூலம் புத்தகத் திருவிழாவில் இடம்பெற்றுள்ள விரும்பிய அரங்குகளில் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.

செப்.,1ல், காலை 10 மணிக்கு, 5 முதல் 10 வயது வரையான மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி, தமுக்கம் கலை அரங்கில் நடக்கிறது. நேரடியாக வந்து பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 94435 72224 என்ற மொபைல் எண்ணில் ஒருங்கிணைப்பாளர் செந்தூரன் என்பவரைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us