தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/301 மணி நேரம் மிருதங்கம் வாசித்து கின்னஸ் சாதனை

301 மணி நேரம் மிருதங்கம் வாசித்து கின்னஸ் சாதனை

301 மணி நேரம் மிருதங்கம் வாசித்து கின்னஸ் சாதனை


UPDATED : டிச 01, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தை சார்ந்த மிருதங்க சக்ரவர்த்தி ராமகிருஷ்ணன், தொடர்ந்து 301 மணி நேரம் மிருதங்கம் வாசித்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இவர் இந்த சாதனையை, கோவை, நேரு ஏரோனாட்டிக்ஸ் மற்றும் அப்ளைடு சைன்ஸ் கல்லூரியில் உள்ள நாதாலயா ஆடிட்டோரியத்தில் நிகழ்த்தி காட்டினார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் 13-ம் தேதி வரை தொடர்ந்து 301 மணி நேரம் மிருதங்கம் வாசித்துள்ளார்.
இதற்கான சான்றிதழை கின்னஸ் சாதனை கமிட்டி,  வழங்கியுள்ளது. இதனால், உலகிலேயே நீண்ட நேரம் மிருதங்கம் வாசித்தவர் என்ற பெருமை கிடைத்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு இவர் கேரளா மாநிலம் கண்ணூரில், தொடர்ந்து 101 மணிநேரம் மிருதங்கம் வாசித்து சாதனை செய்திருந்தார்.
இவர் தென் இந்தியாவில், அதிகம் பயன்படுத்தும் ஒரு இசை கருவியான மிருதங்கம் வாசிப்பதில் புகழ் பெற்றவர். இவர் கடந்த 25 வருடங்களாக பல பிரபல வாய்பாட்டு கலைஞர்களுக்காக மிருதங்கம் வாசித்துள்ளார். பிற இசைக் கக்சேரிகளிலும் இசை மழை பொழிந்துள்ளார். கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், குழைமன்னம் பகுதியை சார்ந்த இவர். வணிகவியல் பட்டதாரி ஆவார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us