தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்புப் பட்டியல் வெளியீடு

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்புப் பட்டியல் வெளியீடு

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்புப் பட்டியல் வெளியீடு


UPDATED : ஆக 28, 2013 12:00 AM

ADDED : ஆக 28, 2013 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2013 12:00 AM ADDED : ஆக 28, 2013 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அறிவித்துள்ள உதவியாளர் காலி பணியிடங்களுக்கு மாநில அளவில் பரிந்துரைக்கப்பட உள்ள பதிவுதாரர்களது பதிவு மூப்பு பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.

இப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் என்.டி.சி., ஒயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன் பிரிவில் தேர்ச்சி பெற்று பதிவு செய்திருக்க வேண்டும். 1.7.2012 அன்றைய நிலையில் அனைத்து பிரிவினரும் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

முன்னுரிமை பிரிவில் ஆதரவற்ற விதவை, கலப்பு திருமண தம்பதியினர், முன்னாள் ராணுவத்தினர், அவரது வாரிசுகள், நில ஆர்ஜிதத்தினால் பாதித்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பதிந்தவர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

முன்னுரிமையற்ற பிரிவில் எஸ்.டி., வகுப்பினருக்கு 2.8.2004 வரையிலும், எஸ்.சி., அருந்ததியினர் 5.1.2006 வரையிலும், பி.சி., முஸ்லிம் வகுப்பினர் 10.1.2001 வரையிலும், எஸ்.சி., வகுப்பினர் 13.1.1999 வரையிலும், பி.சி., எம்.பி.சி., மற்றும் ஓ.சி., 27.11.1998 வரையிலும் பதிந்தவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட உள்ளது.

இந்த தேதிகளில் பதிந்தவர்கள் வரும் 29ம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வந்து சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப் பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us