தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெரியார் பல்கலையில் "டிடி" முறைகேடு: பெண் ஊழியர்கள் 3 பேர் வேலை நீக்கம்

பெரியார் பல்கலையில் "டிடி" முறைகேடு: பெண் ஊழியர்கள் 3 பேர் வேலை நீக்கம்

பெரியார் பல்கலையில் "டிடி" முறைகேடு: பெண் ஊழியர்கள் 3 பேர் வேலை நீக்கம்


UPDATED : ஆக 28, 2013 12:00 AM

ADDED : ஆக 28, 2013 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2013 12:00 AM ADDED : ஆக 28, 2013 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் பெரியார் பல்கலையில், "டிடி" முறைகேடு தொடர்பாக, மூன்று பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலையில், கடந்த ஜூன் மாதத்தில், வெளிமாநில படிப்பு மையங்கள் வழங்கும், "டிடி" க்களில், பல லட்ச ரூபாய் வரை, மோசடி செய்த வெங்கடேசன் என்பவரை, போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து விசாரிக்க, சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட, விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இதில் "பிரைடு" அலுவலகத்தில் பணிபுரிந்த மல்லூர் சசிகலா, இடைப்பாடியை சேர்ந்த ஜெயலட்சுமி, ஓமலூர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி ஆகிய மூவரும், 17.40 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதில் திருப்பி செலுத்தவும், இவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், இக்குழு பரிந்துரை செய்தது.

இதன் அடிப்படையில், நேற்று மேற்கண்ட மூவரையும், டிஸ்மிஸ் செய்து, துணைவேந்தர் முத்துச்செழியன் உத்தரவிட்டார். டிஸ்மிஸ் ஆன சசிகலா, பெரியார் பல்கலை பணியாளர் சங்க தலைவர் அரசு என்பவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறைகேடு குறித்து, இதுவரை தொகுப்பூதிய பணியாளர்கள் மட்டுமே, டிஸ்மிஸ் செய்யப்பட்டும், போலீசில் ஒப்படைக்கப்பட்டும் வருகின்றனர். இதற்கு பொறுப்பு ஏற்றுள்ள உதவி பதிவாளர் அந்தஸ்தில் உள்ள அலுவலர்கள் மீதும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us